Events
Events
Reset

Date: 2026-08-06 | Department: Youth Red Cross

Anti-Drug awareness Program

திருநெல்வேலி பேட்டை ம.தி.தா.இந்துக் கல்லூரியில்
கல்லூரி முதல்வர் அறிவுறுத்தல் படி இன்று 6.08.2026 வியாழக்கிழமை மதியம் இரண்டு மணிக்கு போதை எதிர்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இளையோர் செஞ்சிலுவை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராமலட்சுமி வரவேற்றுப் பேசினார். வரலாற்று துறைத் தலைவர் நீலகண்டன் தலைமையுரை வழங்கினார். சித்தமருத்துவர் காயத்ரி ' போதையின் பாதையில் இருந்து மனம் விடுதலை பெறுதல் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். பின்னர் மாணவர்களுடன் உடல் நலம் பற்றி கலந்துரையாடல் நடைபெற்றது.
பேராசிரியர் செய்யதலி நிஷாயா நன்றியுரை கூறினார். போதை ஒழிப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் இலக்குவன், இசக்கியப்பன், முத்துலட்சுமி, பாதாளம் கருத்தரங்கில் கலந்து கொண்டனர். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பாதாளம் நிகழ்வைத் தொகுத்து வழங்கினார்

Date: 2026-07-29 | Department: Anti-Drug Club

ANTI DRUG AWARENESS PROGRAMME

மதி தா இந்து கல்லூரியில் போதை அரக்கன்என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம்
மதி தா இந்துக்கல்லூரியில் போதை அரக்கன் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் பொது நலத்திற்குமான அச்சுறுத்தல் என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கு செயலர் ஏ எல் எஸ் கருத்தரங்க அறையில் நடைபெற்றது. நிகழ்விற்கு ம. தி.தா இந்து கல்லூரி முதல்வர் முனைவர் கு பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கி தலைமை உரை ஆற்றினார். மேக்ஸ் ஜோன்ஸ் சாரிட்டபிள் டிரஸ்ட் நிறுவனர் டாக்டர் டொமினிக் ஆன் டனி சிறப்புரையாற்றினார். முன்னதாக போதை தடுப்பு மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் தாவரவியல் பேராசிரியர் கா சுப்பிரமணியன் வரவேற்புரை ஆற்றினார். நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பேரா பிச்சம்மாள் நன்றியுரை ஆற்றினார். கருத்தரங்க நிகழ்வுகளை தமிழ்த்துறை பேராசிரியர் எஸ் ராமலட்சுமி தொகுத்து வழங்கினார். கருத்தரங்க நிகழ்வில் பேரா பரமசிவம் பேரா அருண், பேரா பகத் சையத் இப்ராகிம், பேரா இசக்கியப்பன், பேரா செல்வம், பேரா சையத் அலி நிசாயா, பேரா அனிதா மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட போதை தடுப்பு மன்ற தன்னார்வல மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Date: 2026-07-20 | Department: NCC

Special Adventure camp @ PAHALGAM, JAMMU & KASHMIR

Heartiest congratulations to NCC Cadet L/CPL M. Kallathiyan on this remarkable achievement and my wishes to NCC officer Lt. Dr. P. Senthilkumar, for his guidance and valuable support.

Your dedication, hard work, and commitment have brought pride to our institution. Wishing you many more successes in the future.

Date: 2026-07-05 | Department: Physical Education

KOVILPATTI MARATHON 2026

C. Premkumar, III B.Sc. Physical Education, secured 8th position in the Kovilpatti Marathon 2026.

back top