Date: 2026-08-15 | Department: Administration
ம.தி.தா. இந்துக் கல்லூரியில் சுதந்திர தின விழா
திருநெல்வேலி பேட்டையில் அமைந்துள்ள ம.தி.தா. இந்துக் கல்லூரியில் 15.08.2026 அன்று சுதந்திர தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
விழாவில் தேசிய மாணவர் படை (NCC) அதிகாரி திரு. செந்தில்குமார் வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் கு. பாலசுப்பிரமணியன் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சுதந்திர தின சிறப்புரையாற்றினார்.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக திருநெல்வேலி கல்வி சங்கப் பொருளாளர் திரு. தளவாய் திருமலையப்பன் மற்றும் கல்லூரி ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் திரு. சி. திருவாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
தேசிய மாணவர் படை மாணவர்கள் மரியாதை அணிவகுப்பு நடத்தினர். மேலும், கல்லூரியின் கலை மற்றும் பண்பாட்டுத்துறை மாணவ, மாணவிகள் தேசப்பற்றை வெளிப்படுத்தும் வகையில் சிறப்பான நடன நிகழ்ச்சிகளை வழங்கினர்.
நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்க (YRC) அலுவலர் முனைவர் இராமலெட்சுமி நன்றியுரையாற்றினார்.
இவ்விழாவில் கல்லூரி ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சுதந்திர தின விழாவைச் சிறப்பித்தனர்.